அன்பே...
உன்
பிரிவின் சோகத்தில்
என்
விழிகள் எழுதிய துயரம்தான்
இந்த
ஒளிவிடும் கண்ணீர்...
கண்ணே...
உன்
அகவரிகளைத் தேடியலையும்
என் மனம்
நீ
வந்து போன இடங்களில்
உன்
தடயங்களைச் சேகரிக்கும்...
அமுதே...
உன்னுடைய
உதயத்திற்காய்
தவமிருக்கும்
என் மனம்
எனக்கான
கிழக்கை நோக்கிக்
காத்திருக்கும்...
சூரியனையே
சூன்யமாக்கும்
உன்
தரிசனத்திற்காய்
உள்ளம்
ஒரு கோடி கண்கள் கோரி
ஆர்ப்பரிக்கும்...
உனக்காக
இன்று
என்
விழிகள் எழுதிய துயரம்தான்
அன்பே
இந்த
என் ஒளிவிடும் கண்ணீர் !
உன்
பிரிவின் சோகத்தில்
என்
விழிகள் எழுதிய துயரம்தான்
இந்த
ஒளிவிடும் கண்ணீர்...
கண்ணே...
உன்
அகவரிகளைத் தேடியலையும்
என் மனம்
நீ
வந்து போன இடங்களில்
உன்
தடயங்களைச் சேகரிக்கும்...
அமுதே...
உன்னுடைய
உதயத்திற்காய்
தவமிருக்கும்
என் மனம்
எனக்கான
கிழக்கை நோக்கிக்
காத்திருக்கும்...
சூரியனையே
சூன்யமாக்கும்
உன்
தரிசனத்திற்காய்
உள்ளம்
ஒரு கோடி கண்கள் கோரி
ஆர்ப்பரிக்கும்...
உனக்காக
இன்று
என்
விழிகள் எழுதிய துயரம்தான்
அன்பே
இந்த
என் ஒளிவிடும் கண்ணீர் !