Sunday, September 20, 2009

காதல் கவிதைகள்

நீ
தலை தாழ்த்தி
நடக்கும்
ஒவ்வொரு
அழகான பொழுதுகளிலும்
என் காதல்
தலை நிமிர்கிறது பெண்ணே ...!

* * *

அன்பே ...
அசையாதே...! நகராதே...!
உன் பாதங்களின் கீழ்...
உன் பதங்களின் கீழ்...
என்
உயிரின் நிழல்...!

* * *

எரியும் மிளகுவர்த்தியே ...
விட்டில் நான்
உன்னைச்
சுற்றிச் சுற்றி வருகிறேன்
உன்னில்
தற்கொலை செய்துகொள்ள அல்ல
உன்னில் எரியும் தீயை
அணைப்பதற்காக ...!

* * *

என் காதலைக்
கழற்றி எறிந்துவிட்டு
நீ
கண்ணயர முடியாது
அது வெறும்
கனவல்ல பெண்ணே ...
கண்...!

* * *

வெயிலின்
உஷ்ணம் தாங்காது
பசுமையின்
நிழல் நாடி
கரையை உடைத்துக்கொண்டு
நிலத்தில் பாய்கின்ற
கடல்போல்
தனிமையின்
கொடுமை தாங்காது
காதல்
நிழல் நாடி
உன்
அழகுப் பிரதேசத்தில்
பாய்கிறது
ஆசை வெள்ளம்...!

* * *

நீ
நீராடப் போனயா
அல்லது
காதல்
நெருப்பிடப் போனயா ?
ஒ... வெனக் கத்துகின்றனவே
கடலலைகள்...!

* * *

அழகானவளே...
நீ
உன்னை
அழகு படுத்திக்கொள்ளும்
ஒவ்வொரு
ஒப்பனை நாளிலும்
என் மனம்
அலங்கொலமாகிடுதே...!

* * *
மலரைப் படிக்கவந்த
வண்டாக
நான்
உன்னைப் படிக்க வந்தேன்
அந்தோ ...
ஒட்டிக்கொண்டேனே
உன்
காதல் பசையில்...!

* * *

Saturday, September 19, 2009

Friday, September 18, 2009

காதல் கவிதைகள்

என்னை
மறந்து போகிறாயா?
போ...
போ...
தயவு செய்து
உன்
பாதப் பதிவுகளையாவது
பார்த்து வை
ஏனென்றால்
என்
உடலில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
இதயம்
உதிர்ந்து விழும்போலிருக்கிறது...!

* * *

உன் இதயத்தில்
ஒழிந்துகொண்டிருக்கிறேன்
நிர்வாணமாக ...
வெளியே பிடித்துத் தள்ளிவிடாதே
அவானமாக...!

* * *

ஒவ்வொரு அடியாக
உன்னைவிட்டு
நான்
முன்னே நடக்கிறேன்
என் உள்ளமோ
ஒவ்வொரு அடியாக
உன்னை நோக்கி
பின்னே போகிறது ...

கட்டுப்பாடுகள்
என்
கால்களைக் கட்டிக்கொண்டு
கதறுகின்றன
"வேண்டம் " என்று...

உள்ளமோ
பிடிவாதமாக
ஓடுகின்றது
" உன்னோடுதான் ஒட்டிக்கொள்வேன் " என்று ...!