வன்னியில் விளையாடி தந்தை சென்னியை அணைத்தாடி
வளர்ந்தனை செல்வ மகனே… – உந்தன்
பொன்னுடல் தரைசாய புகழ்முடி தமிழேந்த வாழ்கிறாய்
மன்னவன் ஈன்ற மகனே…
தென்னவர் புகழ்பாட தேன்தமிழ் உறவாட உதித்திடும் தமிழீழமே – அன்று
சின்னவர் பெரியவர் அனைவரின் விழியாட
உருவாகும் சிலையொன்று உனக்காகவே ! தம்பி உனக்காகவே !
(மாவீரன் பிரபாகரனின் புதல்வனுக்கய் தீட்டிய கவிதை)